
கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையோர கொடி கம்பங்கள், விளம்பர போர்டுகளை டோல்கேட் நிர்வாகத்தினர் அகற்றும் பணி துவங்கியது. மாவட்ட பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பகளை அகற்ற சென்னை ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி, சாதி, மத, சங்க கொடிக்கம்பங்களை கடந்த மார்ச், 25ம் தேதி, அவர்களாகவே அகற்றிக்கொள்ள உத்தரவிட்டார்.பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், விளம்பர போர்டுகள் அகற்றப்படாமல் இருந்தது. அரசு தலைமை செயலாளர் மற்றும் கலெக்டர் உத்தரவுரப்படி, வீரசோழபுரம் டோல்கேட் நிர்வாகத்தினர் உளுந்துார்பேட்டையிலிருந்து கனியாமூர் வரையிலான தேசிய சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர போர்டுகளை முழுமையாக அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் மாவட்டத்தின் சாலையோரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, கொடிக்கம்பம், விளம்பர போர்டுகள் உள்ளிட்டவைகள் அகற்றப்படாமலேயேஉளளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.