
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு : விழுப்புரத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது.இந்த பயிற்சிக்கு, 17 வயதுக்கு மேற்பட்ட, 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் வரும், 16ம் தேதியில் இருந்து www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சான்றிதழ் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றி, கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். வரும், மே மாதம், 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாகவும், தபால் மூலமாகவும் விண்ணப்பிக்க கூடாது. மேலும் விவரங்களுக்கு, விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை 04146 259467, 94425 63330 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.