கடந்தகறாரு இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு;

Update: 2025-04-13 04:08 GMT
கள்ளக்குறிச்சியில் வீட்டு கடன் தவணை தொகை செலுத்த வந்தவரை தாக்கிய பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கடுவனுாரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் மணிகண்டன்,35; இவர் நகரப்பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டை அடமானம் வைத்து ரூ.2.5 லட்சம் கடனாக பெற்றார்.கடந்த மார்ச், 26ம் தேதி தவணை தொகை ரூ.7 ஆயிரம் செலுத்த, மாணிக்கம் சென்றார். கால தாமதமானதால், அபராதமாக ரூ.300 சேர்த்து செலுத்த அவரிடம் ஊழியர்கள் வலியுறுத்தினர். தகவலறிந்த மணிகண்டன் பணத்துடன் பைனான்ஸ் நிறுவனம் சென்றார். அப்போது, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அவருடைய சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, ஏப்., மாத தவணைக்காக முன்கூட்டியே 'பில்' போட்டனர். இதை தடுத்த மணிகண்டனை பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ரோடுமாமாந்துாரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன், விளாந்தாங்கல்ரோட்டை சேர்ந்த துரை மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து கையால் தாக்கி, அடைத்து வைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News