நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்த எம்எல்ஏ
மதுரையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தலை தளபதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்;
மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கோடை வெயிலில் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம், எல்லீஸ் நகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை தளபதி எம்எல்ஏ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களை இன்று (ஏப்.13)வழங்கினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.