எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம் மேலப்பாளையத்தில் இன்று ( ஏப்ரல் 13) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நெல்லை மண்டல தலைவர் சமீர் தலைமை தாங்கினார். இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அஹமது நவவி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.