திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலையும் இதே நிலைமை நெல்லை மாவட்டத்தில் நீடித்த நிலையில் தற்போது சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.