கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சியின் செயலாளர் எஸ் எம் அந்தோணி முத்து என்பவர் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:- கிறிஸ்தவர்களின் பண்டிகையில் புனிதமான நாளாக புனித வெள்ளியை கடைபிடிக்கிறார்கள். தமிழகத்தில் பல சூழ்நிலைகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்படுகிறது. இதில் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளிக்கிழமையன்று மதுக்கடைகள் மூட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். எனவே அன்றைய தினம் மதுக்கடைகளை மூடினால் அமைதியான புனித வெள்ளிக்கிழமையால் கிறிஸ்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.