வார விடுமுறை நாளான இன்று உதகை தாவரவியல் பூங்காவில் குளு குளு காலநிலையை அனுபவிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்
புகைப்பட மட்டும் செல்பி எடுத்து மகிழ்ச்சி;
வார விடுமுறை நாளான இன்று உதகை தாவரவியல் பூங்காவில் குளு குளு காலநிலையை அனுபவிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்ல இ-பாஸ் முறையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து அமல்படுத்தியுள்ளது. இதில் வார நாட்களில் 6000 வாகனங்களும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள 14 சோதனை சாவடிகளிலும் உயர் நீதிநடைபெற்ற பின்பு சுற்றுலா வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் வார விடுமுறை நாளான இன்று உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்துக் காணப்படுகிறது மேலும் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் இன்றி சுற்றுலாப் பயணிகள் பயணத்தை சுலபமாக மேற்கொண்டு வருகின்றன இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறும் மலை ரயில் பயணம் மேற்கொண்டும் வார விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்.