தளிர் விடும் பாரதம் முப்பெரும் விழா

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் இயக்கத்தின் விழா நடைபெற்றது;

Update: 2025-04-13 14:47 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் சார்பில் 13 ஆம் ஆண்டு துவக்க விழா, இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா, சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி துவக்க பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தளிர்விடும் பாரதத்தின் ஆலோசகர் முனைவர் அழ.லட்சுமணன் தலைமை வகித்தார். தளிர்விடும் பாரதத்தின் பொருளாளர் வரதராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஊர் நாட்டாண்மைக்காரர் அருள், நகர மன்ற உறுப்பினர் இனியா ராஜு தமிழ் சிந்தனை பேரவையின் தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபாளையம் நகர உதவி காவல் ஆய்வாளர் தங்க வடிவேல் J.K.K.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கேப்டன் டாக்டர்.நளினி மற்றும் அசோக் கிருஷ்ணா மருத்துவமனை டாக்டர். நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். சிறந்த சமூக சேவைக்காக குமாரபாளையம் சித்ரா பாபு அவர்களுக்கு விடிவெள்ளி விருதும், பாசம் இல்லம் குமார் அவர்களுக்கு பாசத்தலைவன் விருதும், ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் கவியரசு அவர்களுக்கு உயிர் காக்கும் உத்தமர் விருதும் வழங்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தளிர்விடும் பாதத்தின் தலைவர் சீனிவாசன், உறுப்பினர்கள் சரண்யா பிரபு மற்றும் நிதர்சன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் தளிர்விடும் பாரதத்தின் செயலாளர் பிரபு அனைவருக்கும் நன்றி கூறினார்.

Similar News