செங்கிப்பட்டி காச நோய் மருத்துவமனை, மருத்துவ அலுவலர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
காலிப் பணியிடம்;

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காச நோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையில், மருத்துவ அலுவலராகப் பணிபுரிய விருப்பம் உள்ள எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முன் அனுபவம் உள்ளவர்களும், அரசு மருத்துவ அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். காசநோய் மருத்துவத்தில் சிறப்பு படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மருத்துவ அலுவலர் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகக் குழுத்தலைவர், மகாத்மா காந்தி நினைவு காச நோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனை செங்கிப்பட்டி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு 25.04.2025-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.