பேராவூரணி அருகே கிளை வாய்க்கால் தூர் வாரும் பணி துவக்கம் 

தூர் வாரும் பணி துவக்கம் ;

Update: 2025-04-13 16:46 GMT
  • whatsapp icon
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், வலப்பிரமன்காடு  கிராமத்தில், வீரக்குடி வாய்க்கால் சுமார் 4.60 கி.மீ தூர்வாரும் பணி ரூ.8.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுகிறது.  இதனை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில், பேராவூரணி தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர்கள் காதர் ஒலி, சாக்ரடீஸ், கிளைச் செயலாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News