உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி.

திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கல்லூரியில் இருந்த அண்ணா , மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2025-04-13 17:16 GMT
உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி.
  • whatsapp icon
திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கல்லூரியில் இருந்த அண்ணா , மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இதில் 1131 மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து நின்று பட்டங்களை அமைச்சர் வழங்கினார் ‌. தொடர்ந்து அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது . துணைவேந்தர் நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் எப்போது துணைவேந்தர் நியமிக்கப்படுவார்கள் என எழுப்பிய கேள்விக்கு கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களை கழக உயர்நிலை அலுவலர்களை அழைத்து கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முறையாக சரியாக சட்டப்படி உரிமை படி முதல்வரின் ஆலோசனை பெற்று அனைத்து உயர்கல்வித்துறை சம்பந்தமான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியாசெந்தில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் ‌.

Similar News