சக்தி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை அசைவ விருந்து
பழைய தருமபுரியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மண்டல பூஜை 75 ஆடுகள் வெட்டி பொதுமக்களுக்கு விருந்து;
தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்து 48 நாட்கள் மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. இந்த மண்டல பூஜை நிறைவு விழா மேளதாளங்கள் முழங்க மிகவும் விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு ஊர் சார்பில் 75 ஆடுகள் வெட்டி பொதுமக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இதற்காக பிரமாண்ட பந்தல் அமைத்து பொதுமக்கள் சாப்பிடுவதற்கு வசதியாக டேபிள் மற்றும் சேர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. காலை முதல் மாலை வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அசைவ விருந்து சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.