நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் செய்யது அலி அலாவுதீன்;
நெல்லை சந்திப்பு முதல் சீவலப்பேரி வரை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் 12f பேருந்து இயங்கி வந்தது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் பயன்பெற்றனர். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த பேருந்தை மீண்டும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் செய்யது அலி அலாவுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.