குருவிகுளத்தில் திமுக கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள குருவிகுளத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் 135-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு குருவிகுளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் கிறிஸ்டோபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் திமுக குருவிகுளம் கிளைச் செயலாளர் செந்தில், தணிச் செயலாளர் முனியாண்டி, மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், ஒன்றிய பிரதிநிதி ராயப்பன் மற்றும் துரைசாமி சேகர் துரைப்பாண்டியன், பொன்னுச்சாமி, பன்னீர்செல்வம், பொன்ராமர், அய்யனார், தமிழரசன், சங்கர் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.