திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் கடந்த 10ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோவிலில் 45 ஆண்டுகளுக்கு பின்பு தேரோட்டம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து 11ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா மறுகால்தலை சாஸ்தா கோவிலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து இன்று பிரசித்தி பெற்ற சீவலப்பேரி சுடலைமாடன் சுவாமி கோவிலில் கொடை விழா நடைபெற்று வருகின்றது. இவ்வாறு தொடர் விழா காலங்களில் சீவலப்பேரி காவல்துறையினர் எந்தவிந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவதால் மக்களிடம் பாராட்டு குவிந்து வருகிறது.