தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு;
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் உணவு வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.