இரணியல் அருகே உள்ள சாக்கியான்கோடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (21). இவர் கருங்கலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி இ நான்காம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் திங்கள் நகரிலிருந்து நாகர்கோவில் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். பேயன்குழி என்ற பகுதியில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று திடீரென வலது பக்கம் திரும்பியதாக தெரிகிறது. இதனால் தனுஷின் பைக், டெம்போ மோது மோதியது. இந்த விபத்தில் தனுஷ்க்கு உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் டெம்போ டிரைவர் குன்னக்குழி விளை பகுதியை சேர்ந்த ஆல்வின் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.