கோடை வெயிலை சமாளிக்க அரசு பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி !
கோவையில் அரசு பஸ்களில் ஓட்டுநர் இருக்கைக்கு எதிரே சிறிய அளவிலான மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.;
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், அரசு பஸ்களை இயக்கும் ஓட்டுநர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, கோவை மாநகரில் இயக்கப்படும் 600-க்கும் அதிகமான அரசு பஸ்களில் ஓட்டுநர் இருக்கைக்கு எதிரே சிறிய அளவிலான மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக 130 அரசு டவுன் பஸ்களில் ஓட்டுநரின் இருக்கை அருகே மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு ஓட்டுநர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தனர்.