எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுக சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்து வந்த பரம்பரியத்தை எடப்பாடி பழனிச்சாமி காத்துள்ளதாக பழ கருப்பையா புகழாரம்...

வாரிசு அரசியலை தகர்க்கவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துதுள்ளாதாக பேட்டி.;

Update: 2025-04-14 14:35 GMT
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுக சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்து வந்த பரம்பரியத்தை எடப்பாடி பழனிச்சாமி காத்துள்ளதாக பழ கருப்பையா புகழாரம்... வாரிசு அரசியலை தகர்க்கவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துதுள்ளாதாக பேட்டி... தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை சார்பாக வக்ஃப் சட்டதிருத்தா மசோதாவை எதிர்த்து கண்டன பொதுகூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது.இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.அதனை தொடர்ந்து வக்ஃப் சட்டதிருத்தா மசோதாவை எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பபட்டன. இந்தப் போராட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய சமூகத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பழ கருப்பையா இந்தியா சமய சார்பற்ற நாடு, இஸ்லாமியர்களுக்கும் ஷரியத் சட்டமுமம் இந்துக்களுக்கு தனி சிவில் சட்டமும் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு தனித்தனி சட்டங்கள் உள்ளது. இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்தாலும் ஷரியத் சட்டத்தை கடைபிடிப்பவர்கள். எனவே அவர்களது இசைவோடு தான் சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் என்பதால் எதிர்காலத்தில் இஸ்லாமிய சட்டங்கள் திருத்தப்பட்டு இஸ்லாமியர்கள் உரிமைகள் பரிக்கபடலாம் என்பதற்காகவே ஜின்னா இந்தியாவை பிரித்து கொண்டு போனார். எனவே மதரீதியாக அவரவர் விருப்பப்படி மார்க்கபடி வாழ நாடு அனுமதிக்க வேண்டும். யூனிபார்ம் சிவில் கோட் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருந்தாலும் அது இந்தியாவில் வேற்றுமைக்கு தான் வழிவகுக்கும். யூனிபார்ம் சிவில் கோட் இந்துக்கள் சட்டத்தில் இஸ்லாமியர்களை திணிப்பது போல் உள்ளது. மகாத்மா காந்தி நம் நாட்டிற்கு மதம் இல்லை என்றும் நமது கொள்கை சமய சார்பின்மை என்றும் கூறினார். பெரும்பான்மையை அடிப்படையாக வைத்து சட்டங்களை நிறைவேற்றினால் இந்த நாடு உள்ளாகும், நிம்மதியாக அமைதியாக அவரவர் போக்கில் வாழ இயலாமல் இந்தியா அமைதி இழந்து விடும் என கூறினார். அதிமுக பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவெக தலைலர் விஜயுடன் சமய சார்பற்ற கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்ளலாம் என்று நினைத்தார். லூசு பண்ணிட்டே ஆனால் விஜய் ஆட்சியில் பங்கு என கேட்டதால் அவர் அதை கைவிட்டார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகன் ஆட்சி, பேரன் ஆட்சி வந்துவிடும் எனவே திமுகவை அகற்ற பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து கூட்டணி உறுதி செய்யப்பட்ட பிறகும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வக்அஃபு வாரிய மசோதாவில் வாக்களித்துள்ளார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்து வந்த பரம்பரியத்தை அவர் காத்துள்ளார் என பாராட்டினார்.

Similar News