பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

விழிப்புணர்வு மற்றும் அபராதம் விதிக்க கோரிக்கை;

Update: 2025-04-14 14:39 GMT
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருகிறார்கள் அதிலும் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி விட்டு அங்கேயே வீசி செல்வதால் அங்குள்ள சுற்றுச்சூழலுக்கு கேடாக அமைகிறது. இதை தடுக்கும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2019 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் பயன்படுத்த கூடாது என தடை விதித்தது. மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்ககளில் இருந்து வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து திண்பன்டங்ககளை விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாரு விற்கப்படும் திபாண்டங்களை நீலகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மூலமாக அடைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர் எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்து உள்ளது.

Similar News