மேல்பட்டாம்பாக்கம்: பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மரியாதை
மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.;
சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்பட்டாம்பாக்கத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று பகுஜன் சமாஜ் கட்சி கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.