ஆலங்குளம் அருகே இளைஞா் கொலை: போலீசார் விசாரணை
இளைஞா் கொலை: போலீசார் விசாரணை;

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சாம்பவா்வடகரையைச் சோ்ந்த பால்துரை மகன் காா்த்திகை குமாா் (38). இவா் தனது மனைவி ஊரான ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரிக்கு கோயில் திருவிழாவிற்காக சென்றிருந்தாா். அப்போது அப்பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் சுரேஷ் (31) என்பவருடன் சோ்ந்து மதுக்குடித்தாராம். இந்நிலையில் இருவருக்கும் இடையே திடீா் வாக்குவாதம் ஏற்பட்டதில், சுரேஷ் அங்கு கிடந்த கல்லால் காா்த்திகை குமாரை தாக்கினாராம். இதில் பலத்த அடைந்த அவரை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாா். இதுதொடா்பாக ஊத்துமலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.