மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட பொருளாளர் எச்சரிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட பொருளாளர் மைதீன் பாதுஷா;

தமுமுக & மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட பொருளாளர் மைதீன் பாதுஷா இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் முகநூல் பக்கத்தில் தனது பெயரில் போலி கணக்கு உலா வருவதாகவும், பணம் கேட்டு மோசடி முயற்சி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதனை நம்பி பொதுமக்கள் பண உதவி ஏதும் அளிக்க வேண்டாம். இதற்கு காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.