திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் அதிக அளவு காணப்பட்டது. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 15) காலை நிலவரப்படி அதிகபட்சமாக அம்பாசமுத்திரம் பகுதியில் 29 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 28 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.