கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு சித்தி விநாயகர், காமாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில், செம்பொற்சோதிநாதர், முத்து மாரியம்மன், கங்கையம்மன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கற்பக விநாயகர் கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.இதேப் போன்று நீலமங்கலம், சோமண்டார்குடி, தண்டலை, முடியனுார், வரஞ்சரம், தென்கீரனுார், விருகாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விஷூ பண்டிகையை முன்னிட்டு கேரளத்தை சேர்ந்தவர்கள் அதிகாலை கிருஷ்ணர், குருவாயூரப்பன் சுவாமிகளின் முன் பழங்கள், நவதானியங்கள், நகை, பணம் ஆகியவற்றுடன் விஷூக்கனி கூட்டி, பூஜைகள் செய்து, கை நீட்டம் கொடுத்து புத்தாண்டு தினத்தை கொண்டாடினர்.