
சங்கராபுரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் கீழ் தேசிய பசுமைப்படை சார்பில், பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். முரார்பாளையம் பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் வரவேற்றார். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் முத்துக்கருப்பன், பொது மக்களுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டால் விளையும் தீமைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.