சீதா கல்யாண உற்சவம்

உற்சவம்;

Update: 2025-04-15 04:13 GMT
சீதா கல்யாண உற்சவம்
  • whatsapp icon
சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் ராம பக்த மண்டலி சார்பில் ராம நவமியையொட்டி ராம பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து பஜனை மண்டபத்தில் முரளி பாகவதர் குழுவிணரின் அஷ்டபதி மற்றும் திவ்யநாம பஜனை நடந்தது. உஞ்சவர்த்தியை தொடர்ந்து சீதா கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வெங்கடேசன் செய்திருந்தார்.

Similar News