தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமரா

அளுந்தூர் பிரிவு ரோடு பகுதியில் மணிகண்டம் போலீசார் சார் பில் 24 மணி நேரமும் செயல்படும் 4 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.;

Update: 2025-04-15 05:01 GMT
தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமரா
  • whatsapp icon
திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவ தாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் அறிவுரையின்படி பொதுமக் கள் பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக மணிகண்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி-மதுரை தேசிய நெடுஞ் சாலை அளுந்தூர் பிரிவு ரோடு பகுதியில் மணிகண்டம் போலீசார் சார் பில் 24 மணி நேரமும் செயல்படும் 4 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் மூலமாக போலீசார் மாநகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Similar News