அம்பேத்தகர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் அம்பேத்தகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நகர பா.ஜ.க, அம்பேத்கர் மனிதநேய நற்பணி மன்றத்தார் மற்றும் விடியல் ஆரம்பம் சார்பில் அம்பேத்தகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.நகர பா.ஜ.க. சார்பில் நடந்த விழாவில் நகர தலைவர் வாணி தலைமை வகித்தார். அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விடியல் ஆரம்பம் சார்பில் நடந்த நிகழ்வில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.