பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு
மாணவனுக்கு அரிவாள் வெட்டு;

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவனுக்கு பென்சில் கொடுக்கல் வாங்கலில் இன்று (ஏப்ரல் 15) அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனை தடுக்க சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கத்தியால் குத்திய மாணவன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.