தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

சென்னிமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2025-04-15 06:41 GMT
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
  • whatsapp icon
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோமாதா பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மூலவர் சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி -தெய்வானை மற்றும் தன்னாசியப்பன் கோவில்களுக்கும் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக நேற்று காலை முதல் இரவு வரை கோவிலுக்கு சொந்தமான பஸ்களுடன் கூடுதல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்றும் முருகனை தரிசித்தனர். தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில், சில்லாங்காட்டுவலசு மாகாளியம்மன் கோவில், சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவில்கள் உள்ளிட்ட கிராமப்புற கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ------

Similar News