நயினார் நாகேந்திரனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்;

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவராக திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 15) சட்டப்பேரவையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.