புரட்சி பாரதம் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் கோரிக்கை
புரட்சி பாரதம் கட்சி;

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் செல்லும் வழி மெயின் ரோட்டில் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் காருகுறிச்சி அருணாச்சலம் திருவுருவ சிலை பராமரிப்பு இன்றி காட்சியளிக்கின்றது. அவரது சிலையை பராமரித்து வரும் ஏப்ரல் 26ஆம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு அவருக்கு நெல்லையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் ஏ.கே நெல்சன் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.