தீயணைப்போர் தியாகிகள் தினம்: அதிகாரிகள் அஞ்சலி
தீயணைப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தீயணைப்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, ஈரோடு மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது;

தீயணைப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தீயணைப்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, ஈரோடு மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் மலர் வளையம் வைத்து இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.ஆண்டுந்தோறும் ஏப்ரல் 14ம் தேதி நாடு முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினமாக அனுசரித்து வருகிறது. அன்றைய தினம் தீவிபத்து மற்றும் மீட்பு பணிகளில் செயல்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தீயணைப்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, ஈரோடு மாவட்ட தீயணைப்புத்துறையினர் சார்பில், இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட தீயணைப்புத்துறை அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலுவலர் முருகேசன், மாவட்ட உதவி அலுவலர் கணேசன், கலைச்செல்வன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, இன்று முதல் (14ம் தேதி) 20ம் தேதி வரை தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றையில் தீ விபத்து ஏற்படும் போது, அதனை எப்படி கையாள்வது, மீட்புப்பணி போது எப்படி செயல்படுவது அகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.