கரூரில் வேம்பு மாரியம்மன் ஆலய வெள்ளிவிழாவை முன்னிட்டு சித்திரை திருவிழா.

கரூரில் வேம்பு மாரியம்மன் ஆலய வெள்ளிவிழாவை முன்னிட்டு சித்திரை திருவிழா.;

Update: 2025-04-15 08:33 GMT
  • whatsapp icon
கரூரில் வேம்பு மாரியம்மன் ஆலய வெள்ளிவிழாவை முன்னிட்டு சித்திரை திருவிழா. கரூர் மாநகராட்சிக்கு பசுபதிபுரம் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் பிரசித்தி பெற்ற வேம்பு மாரியம்மன் கோவில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 7-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஏப்ரல்8-ல் திருவிளக்கு பூஜையும், ஏப்ரல் 17ல் பூச்செரிதல் விழாவும், ஏப்ரல் 13ல் பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதயத்தை தொடர்ந்து இன்று பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்காக கோவில்களாகத்தில் அன்னதானம் தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். எடுத்துவரப்பட்ட தீர்த்த குடம் மற்றும் பால் குடங்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News