ஆய்க்குடி முருகன் கோவிலில் பாலாபிஷேகம் நடைபெற்றது
முருகன் கோவிலில் பாலாபிஷேகம் நடைபெற்றது;

தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை விசு திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி வன்னிய சத்திரிய குல மண்டகப்படி உற்ச்சவ மூர்த்திக்கு பால் சந்தனம் குங்குமம் தேன் விகுதி உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சப்பர வீதி உலா நடைபெறும் என்றும், பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.