விருந்தாடியம்மனுக்கு பெண்கள் பால்குடம் ஊர்வலம்
அப்பாவு நகர் குமார் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ விருந்தாடியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருவிழா முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்;
தர்மபுரி நகராட்சி குமாரசாமிபேட்டை அப்பாவு நகர் குமார் காலனியில் வீற்றருக்கும் அருள்மிகு ஸ்ரீ விருந்தாடியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு மங்கள இசை ஸ்ரீ விநாயகர் வழிபாடு தேவதா எஜமானர் சங்கல்பம்,புன்னியாக வாசனம். கணபதி ஹொமம் . நவகிரக ஹொமம்.பூர்ணாகுதி. தீபாராதணை நடைபெற்றது அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் கங்கனம் கட்டுதல் . அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு பூஜை செய்து கொடி ஏற்றப்பட்டது அதைத்தொடர்ந்து, இன்று ஏப்ரல் 16 பென்னாகரம் ஆலமரத்து விநாயகர் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை உடன் பெண்கள் பால்குட ஊர்வலம் மற்றும் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துக்கொண்டு முக்கிய வீதி வழியாக குமாரசாமி பேட்டை முருகர் கோயில் தெரு வன்னியர் மகா மாரியம்மன் ஆலயத்தில் உழவர் தெரு. அப்பாவும நகர் வழியாக குமார் காலனி. பெண்கள் பால்குடம் எடுத்து வந்து கோவிலில் வந்தடைந்தது ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மாலை 5 மணி அளவில் மங்கள இசை பாலகணபதி பூஜை, கும்பலங்காரம் கலாகர்ஷனம் யாகசாலை ப்ரவேசம் நடைபெறும் நாளை 17ஆம் தேதி மங்கல இசை கோ பூஜை இரண்டாம் கால யாக வேள்வி நாடி சந்தனம் திர விய ஹொமம் மஹாபூர்ணாகுதி.யாத்ராதானம் தீபாராதணை கடம்புறப்பாடு காலை 9 மணிக்குமேல் 11 மணிக்குள் அருள்மிகு ஸ்ரீ விருந்தாடியம்மன் கோபுரம் மூலவர் மகா கும்பாபிஷேக தொடர்ந்து அபிஷேகம் ஆராதனை தசதரிசனம் மாங்கல்ய தாரனம் தீபாராதணை நடைபெற உள்ளது.