சுரண்டையில் கல்லூரி மாணவர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது
கல்லூரி மாணவர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் சுரண்டை தீயணைப்பு நிலையம் சார்பில் இன்று தீத்தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர் தலைமையில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு முதலுதவி பயிற்சி தீ தடுப்பு பயிற்சி தீயணைப்பான் பயன்படுத்தும் முறை செயல் முறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான நாட்டு நலப் பணி திட்ட மாணவ மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.