திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள C.M.S. மேரி ஆர்டர் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.