விழிப்புணர்வு இரத்த தானம் மாரத்தான் போட்டி

உலக ஹீமோபிலியா தினத்தை முன்னிட்டு உதிரம் உயர்த்துவோம் இரத்ததான கழகம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் விழிப்புணர்வு இரத்த தானம் மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்பு;

Update: 2025-04-17 03:48 GMT
உதிரம் உயர்த்துவோம் ரத்ததான கழகம் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைஇணைந்து நடத்தும் உதிரம் கொடுப்போம் இன்னுயிர் காப்போம் என்ற அடிப்படையில் இரத்த தானங்கள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் அறியும் விதமாக பழனி, ஒட்டன்சத்திரம் ,ஆத்தூர், நிலக்கோட்டை ,நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு மாறத்தான் போட்டியானது நடைபெற்றது . இந்த போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் நேருஜி நகர் ரவுண்டானா ஆர்த்தி தியேட்டர் ரோடு பேருந்து நிலையம் தலைமை தபால் நிலையம் வெள்ள விநாயகர் கோவில் பெரிய கடைவீதி நகரின் முக்கிய சாலையில் வழியாக 5 கிலோ மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற 10 மாணவ மாணவியர்களுக்கு. முதல் பரிசாக 7500 இரண்டாவது பரிசாக 5000 ரூபாய் மூன்றாவது பரிசாக 3500 என ரொக்க பணங்களும் , பதக்கங்கள், சான்றிதழ்கள்வழங்கி கௌரவித்தனர். இந்த மாரத்தான் போட்டியை பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி மற்றும் அரசு மருத்துவர்கள் கொடிய அசைத்து துவங்கி வைத்தனர்.

Similar News