கோவை: இருட்டு கடை பிரச்சனை - மணமகன் தரப்பினர் பேட்டி !

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்தப் பெண் கனிஷ்காவின் மாமனார் யுவராஜ் சிங் கோவையில் இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.;

Update: 2025-04-17 05:33 GMT
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்தப் பெண் கனிஷ்காவின் மாமனார் யுவராஜ் சிங் கோவையில் இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், நாங்கள் எப்பொழுதும் அவர்களுடன் சுமுகமாக போக வேண்டும் என்று தான் நினைத்தோம். அதேபோல இருட்டு கடையை யாரும் வாங்க முடியாது. இருட்டுக்கடை அவர்களின் பெயருக்கு மாறி 70 நாட்கள் தான் ஆகிறது. அதற்கு முன்னர் வரை சூரஜ் என்ற பெயரில் தான் அந்த கடை இருந்தது. அந்தக் கடையின் உண்மையான உரிமையாளர் சுலோச்சனா பாய். அவர்கள் இறந்ததற்குப் பிறகு பெயர் மாற்றம் நடந்தது. அவர்களின் உறவினர்கள் எல்லாம் அவர்கள் இறந்து ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே, அவரை எடுக்க வேண்டும் எனக் கூறும்போது, அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கூறி இருந்தனர். அந்த சுலோச்சனா பாய் இவர்களுக்கு எழுதிக் கொடுத்ததாக இவர்கள் கூறுகின்றனர். ஹரிசிங் என்பவர் தான், அந்தக் கடையை நிர்வகித்துக் கொண்டு இருந்தார். அவருமே மர்மமான முறையில் தான் இறந்தார். கடையே அவர்களுக்கு இப்பொழுது தான் வந்து இருக்கிறது அதை நாங்கள் ஒருபோதும் வரதட்சணையாக கேட்கவில்லை. அதேபோல திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட நாங்கள் வரதட்சணை வாங்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளனர்

Similar News