கோவை: கோவை அபார வளர்ச்சி கண்டுள்ளது - நடிகை மீனா பேச்சு !

டிரினிட்டி கண் மருத்துவமனையில் தென்னிந்தியாவிலேயே அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கான்டோரா லாசிக் கண் அறுவை சிகிச்சை கருவி விழாவில் நடிகையின் மீனா கலந்து கொண்டார்.;

Update: 2025-04-17 06:52 GMT
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி கண் மருத்துவமனையில் தென்னிந்தியாவிலேயே அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கான்டோரா லாசிக் கண் அறுவை சிகிச்சை கருவி அறிமுக விழா நேற்று நடைபெற்றது. பிரபல திரைப்பட நடிகை மீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கருவியை முறைப்படி துவக்கி வைத்தார். விழாவில் பேசிய நடிகை மீனா, கோவை நகரத்திற்கும் தனக்கும் இடையே நல்லுறவு இருப்பதாக தெரிவித்தார். முன்பு அடிக்கடி கோவைக்கு வந்ததாகவும், இங்குள்ள பிரபலமான இனிப்பு கடையில் இனிப்புகள் வாங்கிச் சென்றதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும், உடலின் முக்கிய பாகங்களான இதயம், கல்லீரல் போன்றவற்றை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கண்களையும் பாதுகாப்பதில் தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சமீப காலமாக தானும் படிப்பதற்கு கண் கண்ணாடிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து, கான்டோரா லாசிக் தொழில்நுட்பம் குறித்து மருத்துவரிடம் பல்வேறு கேள்விகளை நடிகை மீனா எழுப்பினார். பின்னர், விரைவில் தானும் கண் பரிசோதனை செய்து கொள்வதாக புன்னகையுடன் தெரிவித்தார். தான் முன்னர் பார்த்த கோவைக்கும் தற்போது பார்க்கும் கோவைக்கும், அபார வளர்ச்சி கண்டறிகிறது பார்ப்பதற்கே சந்தோஷமாக இருப்பதாக கூறினார். இந்த புதிய அதிநவீன கான்டோரா லாசிக் கருவி மூலம், கண் குறைபாடுகளை மிகவும் துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் சரி செய்ய முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News