தேனியில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு கழிவறை, உடை மாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரக்கோரியும் திருவிழா நடைபெறும் நாட்களில் அப்பகுதியில் செயல்படும் மதுபான கடைகளை மூடப்பட வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று கொடிக்கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி மே மாதம் 6 ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை 8 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது இந்த திருவிழாவிற்கு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வருகை தருவார்கள் இந்நிலையில் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என தேனி மாவட்ட இந்து முன்னணி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது பக்தர்களுக்கு அதிக அளவில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் முல்லை பெரியாற்றில் நீராடி வரும் பக்தர்களுக்கு உடை மாற்றும் அறை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் திருவிழா நடைபெறும் நாட்களில் அப்பகுதியில் இருக்கும் மதுபான கடைகளை மூடப்பட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது