கரூரில் பாஜக மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் பாஜக மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-17 07:24 GMT
கரூரில் பாஜக மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நாளிதலான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நிறுவனத்தின் சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தோடு, பொய்யான வழக்கை முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அரசியல் பழிவாங்கும் நோக்குடன் அமலாக்கத்துறை மூலம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததை கண்டித்து இன்று தமிழக முழுவதும் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் வடக்கு நகர தலைவர் ஸ்டீபன் பாபு, புகலூர் நகர செயலாளர் கமல் ராஜேந்திரன், கடவூர் செயலாளர் விஜயன் நெரூர் பாலு, அரவக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர் பஜிலா பானு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசை கண்டித்தும், அமலாக்க துறையின் பொய் வழக்கை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News