ஆவாரம் காட்டுப்புதூர் அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.இருவர் படுகாயம்.
ஆவாரம் காட்டுப்புதூர் அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.இருவர் படுகாயம்.;
ஆவாரம் காட்டுப்புதூர் அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, மேதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் வயது 50.இதேபோல அருகில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ஹரிஹரன் வயது 33. இவர்கள் இருவரும் ஏப்ரல் 15 ஆம் தேதி காலை 6:30 மணி அளவில், கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவரது வாகனம் ஆவாரம் காட்டுப்புதூர் தனியார் ஆயில் மில் அருகே சென்றபோது, அதே திசையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஹரிஹரன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில், கோபால் மற்றும் ஹரிகரன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த கோபாலின் மகன் நவீன் குமார் வயது 27 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.