பகவதிபுரம் அங்கன்வாடி பகுதிகளில் சுகாதார சீர்கேடு
அங்கன்வாடி பகுதிகளில் சுகாதார சீர்கேடு;
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள புளியரை ஊராட்சிக்குட்பட்ட பகவதிபுரம் ராஜூ நகரில் 2012 ஆம் ஆண்டு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது வரை எந்த ஒரு பராமரிப்பின்றி குப்பை கூளமாக காணப்படுகிறது. அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது .இதனால் இந்த பகுதியில் சுகாதாரத்திற்கு நிலவு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .