கன்னியாகுமரியில் கலெக்டர் ஆய்வு 

கண்ணாடி பாலம்;

Update: 2025-04-17 09:33 GMT
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள  அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகனாந்தர் பாறையினை இணைக்கும்  கண்ணாடி இழை பாலத்தினை இன்று குமரி கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:-    தற்போது கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்ட பின்பு அனைத்து நாட்களிலும் கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், மற்றும் நமது மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் வருகை தருகின்றனர். இதனால்  கண்ணாடி இழை தரைத்தள பாலத்தின் உறுதித்தன்மையினை குறித்தும், சிறு சிறு மராமரத்து பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, ஓரிரு நாட்களில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Similar News