கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-04-17 12:24 GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி மற்றும் நாடாளு மன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோபிநாத் எம்.பி. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதாக மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஏராளமாக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News