உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் போடி முந்தல் சோதனைச் சாவடியில் நேற்று (ஏப்.16) வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில், குடிநீர் புட்டியில் 7 லிட்டர் சாராயம் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட ஸ்கோரியா குரியன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.